சூரியன் மிகவும் கோபமாக இருந்த ஒரு மே மாதத்தின் ஞாயிற்றுக் கிழமை அன்று. கார்திக் புதிதாக வாங்கிய சோபாவில் அமர்ந்து அண்ணாந்து ஃபேன்ஐ பார்த்து கொண்டு இருந்தான்.
அது என்னவோ தெரியவில்லை மே மாததில் மட்டும் ஃபேன்கள் தங்கள் முழு உழைபைப் போட்டு வேலை செய்தாலும் திட்டத்தான் தோணும். கார்திக்கும் அதைதான் செய்து கொண்டிருந்தான்.
தன் வீட்டு ஃபேன்ஐ மட்டுமில்லாமல் சூரியனையும் சேர்த்து சபித்தான்.
கார்திக் ஒரு ஐடி ஊழியன். ஐடி கம்பெனி என்றால் சினிமாவில் காட்டுவதுபோல் பெரிய கம்பெனி ஒன்றும் இல்லை. ஓரு இருபது பேர் இருப்பார்கள். 12 ஆண்கள் 7 பெண்கள் அந்த பெண்களை தொல்லை செய்யும் ஒரு மேனேஜர் அவ்வளவுதான்.
“5 மினிட்ஸ்ங்க ” என்று கிச்சன்க்குள்ளிருந்து ஒரு குரல் வந்தது. சுமதி கணவனுக்கு பிடித்த சிக்கன் சமைத்து கொண்டிருந்தாள். உடலெல்லாம் வியர்வை. ஆனால் அதைப்பற்றி அவளுக்கு கொஞ்சமமும் கவலையில்லை. தன்னவனுக்காக சமைக்கின்றோம் என்கிற ஒரு சந்தோஷம்.
கல்யாணம் முடிந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. பத்து நாள் ஹனிமூனில் மூணாரை சுற்றி பார்த்ததை தவிர வேறொன்றும் நடக்கவில்லை. அவள் அனுமதிக்கவில்லை என்று சொல்ல முடியாது. இவனுக்கு தோணவில்லை.
செக்ஸிற்கு காமத்தை விட காதல் அவசியம் என்பது அவனது சித்தாந்தம். அந்த காதல் சற்று குறைவாக இருந்ததாக கார்திக்குக்கு தோண்றியது.
அது ஒரு அரேஞ்சுடு மேரேஜ். கார்திக்குக்கு சுமதியை பார்த்ததும் பிடித்துவிட்டது. கல்யாணம் ஆன தினத்திலிருந்து அவனுக்குள் ஒரு குழப்பம். தவுறு செய்து விட்டோமொ என்று தோன்றியது.
பார்த்ததும் பிடித்தது போதும் காதல் பின்னால் வரும் என்று நம்பி அவசரமாக கல்யாணம் செய்து கொண்டான். ஆனால் அந்த பாழா போன காதல் வந்தபாடில்லை.
சுமதியை பிடிக்காமலில்லை ஆனால் அது கார்திக்குக்கு போதுமானதாக இல்லை.
அவனுக்குள் இன்னொரு வேடிக்கையான சந்தேகம் இருந்தது. ஓரு வேலை தன்னை அறியாமல் அவளை காதலிக்கிறோமோ என்று.
அவனை தப்பு சொல்லமுடியாது. இதற்கு முன் வாழ்க்கையில் காதலித்திராத ஒருவனுக்கு ‘இதுதான் காதல்’ என்று எப்படி தெரியும்?
“சாப்பிட வாங்க” என்று சுமதி சொல்லவும் கார்திக்குக்கு சுயநினைவு வந்தது.
இருவரும் சாப்பிட அமர்ந்தனர். சுமதிக்கு படபடப்பாக இருந்தது. தான் செய்த சிக்கன் கணவனுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்ற கவலை அவளுக்கு.
கார்திக் முதல் வாய் எடுத்து வைத்தான். தன் அம்மாவின் கைப்பக்குவம் அப்படியே இருந்ததுபோல் இருந்தது அவனுக்கு.
“எப்படி இருக்கு?”
“அப்டியே எங்க அம்மா செஞ்ச மாறி இருக்கு மா“ என்றான்.
அந்த வார்த்தைகளை கேட்டபின்தான் உயிர் வந்தது சுமதிக்கு.
நிம்மதியாக சாப்பிட்டாள்.
கார்திக் பழயபடி சிந்தனையில் ஆழ்ந்தான்.
அடுத்தநாள் கார்திக்குக்கு ஆபீஸ் இருந்ததால் இருவரும் சீக்கிரமே படுக்கைக்கு சென்றனர்.
கார்திக் படுத்தானே தவிர தூங்கவில்லை. தூக்கம் வரவில்லை.
சுமதி தூங்கிவிட்டாளா என்று பார்த்தான். தூங்கியதாக தோணவில்லை.
“சுமதி” மெதுவாக கூபிட்டான்.
“என்னங்க தூங்கலயா.”
“இல்ல, தூக்கம் வரல”
“ஏதாச்சும் வேணுமா”
“இல்ல. உன் கிட்ட ஒண்ணு கேக்கட்டுமா”
“ம். கேளுங்க.”
“எண்ணய எதனால கல்யாணம் பண்ணிக்கிட்ட?”
சுமதி சற்றும் யோசிக்காமல் “அழகா இருந்திங்க.”
கார்திக்குக்கு துள்ளி குதிக்கவேண்டும் போலிருந்தது.
ஆணுக்கு பெண்ணின் பாராட்டு சொற்களை விட சிறந்த விருது இந்த உலகதில் ஒன்றும் இல்லை.
“நாளைக்கி பீச்சுக்கு போய் சனரைஸ் பாக்கலாமா?” என்றான் கார்திக்.
“நாளைக்கு உங்களுக்கு ஆபீஸ் இருக்குல அப்பறம் எப்படி போறது”
“நடந்தா ரெண்டு நிமிஷதூல பீச் வந்துரும். போய்ட்டு சீக்கிரம் வந்தரலாம்“
“இல்ல சமைக்கனும்ல”
“நாளைக்கி நா வெளிய சாப்ட்டுக்குரேன் .”
“சரி போலாமங்க”
தூங்கும் முயற்சிக்கு இருவரும் திரும்பினர்.
ஓரு ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். திடீரென கார்திக் எழுந்து “எங்க அம்மா கேட்டா மட்டும் நீ சமைச்சு குடுத்தன்னு சொல்லிடு” என்றான்.
சுமதி சிரித்தபடி சம்மதிதாள்.
அடுத்தநாள் நான்கு மணிக்கே அவர்கள் திருவான்மியூர் பீச்சில் சூரியன்காக காத்திருந்தனர்.
சூரியன் மெல்ல வெளிவர தொடங்கியது.
திடீரென கார்திக்குக்கு பீச் எப்பொழுதும் இருபதைவிட அழகாக இருபது போல தோன்றியது.
பலமுறை பார்த்த அந்த திருவான்மியூர் பீச் அவன் கண்ணுக்கு புதிதாக தெரிந்தது. இந்த பீச் எப்பவவும் இவள்ளவு அழகாகதான் இருந்ததா என்று யோசித்து கொண்டிருந்தான்.
ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த அமைதி அவனுக்கு பிடிதிருந்தது. அந்த அமைதியை கெடுக்காமல் அலைகள் எலுப்பிய அந்த ஓசை பிடிதிருந்தது. மெல்ல வெளியே வந்து கொண்டிருந்த சூரியனை பிடிதிருந்தது. நேத்து சபித்துக் கொண்ட சூரியனை இன்று கொஞ்ச வேண்டும் போலிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக சுமதியை பிடிதிருந்தது. இந்த பிரபஞ்சதிலயே இவளை போல் பேரழகி இல்லை என்று தோன்றியது.
சூரியன் மெல்ல வெளிய வர வர கார்திக்குக்கு இருந்த சந்தேகங்கள் மறய தொடங்கின. தனக்குள் காதல் மலர்வதை உணர்ந்தான்.
அம்மா போல் சமைத்ததாலா, தன்னை அழகன் என்று சொன்னதாலா, இல்லை இந்த சூரியனாலா என்று கார்திக்குக்கு தெரியவில்லை. அதை பற்றி அவனுக்கு கவலையும் இல்லை.
சுமதியின் கையை இருக்க பற்றிக்கொண்டான்.
சற்று நேரதில் நேற்று ஏன் சூரியனை சபித்தோம் என்று நியாபகம் வந்தது. இருவரும் வீட்டிற்கு நடக்க ஆரம்பிதனர். அந்த நடை பயணதில் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவளுடன் அமைதியாக நடப்பதும் பிடிதிருந்தது.
கட்டிலில் அமர்ந்திருந்தான். சுமதி குளித்துவிட்டு வந்தால்.
அவளை ரசித்தபடி “இங்கே வா” என்று கட்டிலுக்கு அழைத்தான்.
“ஏன்?” என்றால் சுமதி ஒன்றும்தெறியதாவள் போல்.
முற்றும்
Porvaal

Comments
Post a Comment